கொல்லங்கோடு வெங்கஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஷாஜி இவரது 13 வயது மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு வயிற்று வலி இருந்ததால் நேற்று இரவு மாத்திரை கொடுத்து தூங்க வைத்தனர் இன்று காலை மகன் அசைவில்லாமல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர் இது குறித்த புகார் கொல்லங்கோடு போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்