நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி சாஸ்தாபுரி ஹோட்டல் முன்பு திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூடலூர் உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது இரவு 08.45 மணியளவில் உலா வந்தது . இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் கடை வியாபாரிகளும் பொதுமக்களும் அச்சமடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது