தென்னேரி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கும்ப மரியாதையுடன் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.