ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று காலை கைலாசகிரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறைகள் சார்பில் மனுக்கள் பெறப்பட்ட நிலையில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அதிக அளவிலான பெண்கள் விண்ணப்பம் அளித்தனர். இதில் வட்டாட்சியர் ரேவதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.