திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மட்றபள்ளி பகுதியில் மிகவும் பிரபலமான வாரச்சந்தை உள்ளது. இந்த வார சந்தை ஒவ்வொரு பிரதி வாரம் செவ்வாய் கிழமை நாட்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற வார சந்தையில் சிறிய ஆடுகள் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையும் பெரிய ஆடுகள் 10 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகள் 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விற்பனையானது.