உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் ஆர்.சி லயோலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வழங்கினார்.