திண்டுக்கல், தாடிக்கொம்பு, அருணாச்சலம்நகரை சேர்ந்த சுரேஷ் மகன் சுதர்சன்(24) என்பவரை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த சுதர்சன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.