சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.கோவிலாபட்டியில் பேரிகார்டில் முந்த முயன்ற கார் ஓட்டுநர், அரசு பேருந்து மீது குண்டுக்கல் வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்தார். ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்த கார் ஓட்டுநர் கலைவாணன், பேருந்து மோதியதாக கூறி தாக்குதல் நடத்தினார். பயணிகள் காயமின்றி தப்பினர். எஸ்.வி.மங்கலம் போலீசார் கலைவாணனை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.