உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் நள்ளிரவில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் ஆம்னி பேருந்துகள், கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பான்களில் நவீன இயந்திரம் கொண்டு அளவீடு செய்யப்பட்டு அந்த ஒலி எழுப்பாண்கள் பறிமுதல் செய்யப்பட்டது.