சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் பெய்த மழையில் மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்தது யாரும் அந்தப் பகுதியில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது மேலும் இதனை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து 50வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.