நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் வருகிற (29ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, மணக்காட்டூர், மங்களப்பட்டி, குடகிப்பட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் கோட்டைப்பட்டி ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தகவல் தெரிவித்துள்ளார்.