விருதுநகர் முத்து செல்வி ஹோட்டலில் தேவேந்திரர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது மற்ற நிர்வாகிகள் கூட இருந்தனர். அவர் பேசும்போது பட்டியல் வெளியேற்றத்தால் எந்த வித மாற்றமும் ஏற்பட போவதில்லை ஆர்எஸ்எஸ் பாஜகவின் தூண்டுதலின் பேரில் பட்டியல் வெளியேற்றம் என்ற கோரிக்கையை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சில தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்று பேசினார்.