ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் காதல் விவகாரத்தில் சுதாகர் மற்றும் அவரது நண்பர்களை நேற்று கோவில் திருவிழாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த உமாசந்திரன் மற்றும் அவரது மகன் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் உமாசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் 2பேரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர்களை விடுவிக்க கோரி சுதாகரின் தாய் மற்றும் அவருடைய காதலி மற்றும் உறவினர்கள் இன்று மாலை உமராபாத் காவல் நிலையம் முன்பு படுத்தும், பெட்ரோல் ஊற்றிகொண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.