ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி வந்த ஆந்திரா அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனை செய்ததில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோராக்நாத் -40 என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு வந்த 59 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்,