நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் கடந்த 4ஆம் தேதி தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருப்பத்தர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை காண்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது தனது இருசக்கர வாகனத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டுவிட்டு உள்ளே சென்று உறவினரை பார்த்து விட்டு வெளியே வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மேலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.