பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் பூங்கா ரோடு, பழனி பேருந்து நிலையம் ரோடு, காந்தி ரோடு, உடுமலை சாலை வழியாக பழனி சண்முகநதியில் கரைக்கப்பட்டது. முன்னதாக சிலைகள் அனைத்தும் பழனி அடிவாரம் பூங்காரோடு பகுதியில் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. பின்பு 140 சிலைகள் ஊர்வலமாக சண்முகநதிக்கு கொண்டு செல்லப்பட்டு நதியில் கரைக்கப்பட்டது.