ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வரகூர் கிராமத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்ட இலவச உடற்பயிற்சி கூடத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து இளைஞர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.