திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் 8 மாதமே ஆன பச்சிளம் ஆண் சிசுவின் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு போலீசார் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்