கோவை மாவட்டம் காரமடை வட்டார பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 363 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தற்பொழுது அதில் 326 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 37 பயனாளிகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலோசனை மேற்கொண்ட விரைவில் பணிகளை முடிக்க அவர் பயனாளிகளிடம் வலியுறுத்தினார்