தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிராமத்தைச் சார்ந்த 12 வயது சிறுமிக்கு அதே ஊரைச் சார்ந்த தனியார் பள்ளி நிர்வாகி லிவிங்ஸ்டன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லிவிங்ஸ்டனை கைது செய்தனர்