தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா கொத்தாலி, இளவேலங்கால், அயிரவன்பட்டி, ஓனமாக்குளம்குளம், தென்னம்பட்டி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை மதிய முதலே இடி மின்னலுடன் பெய்த கன மழையால் ஊரில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொத்தாளி கிராமத்தில் ஊருக்கு மேல்புறம் உள் தாம்போதி பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது இதனால் தரைப்பாலம் முற்றிலுமாக மூடியது. இதனால் கயத்தாறு இருந்து கொத்தாளி கொல்லங்கிணறு, மணியாச்சி செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை