வாணியம்பாடியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று 5 ஊராட்சிகளுக்கான நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று நண்பகல் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, ஜோலார்பேட்டை MLA தேவராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாற்றுத்திறனாளி பெண்குழந்தை தனது தந்தையுடன் வந்து தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சாலைவசதி ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்க கோரி துறைசார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.