விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் விருதுநகர் நகராட்சி மற்றும் கியூஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம். நகர் மன்றத் தலைவர் மாதவன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 12 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 442 பேர் முகாமில் கலந்து கொண்டனர். 240 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ சீனிவாசன் பணி நியமன அணைகளை வழங்கினார். நகர்மன்ற உறுப்பினர்கள் கியூஸ் ஊழியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாலை 4 மணி வரை முகாம் நடைபெற்றது.