ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் வனவிலங்கு வேட்டையாட நாட்டு வெடிகுண்டு எடுத்து செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வாலாஜா நரிக்குறவர் காலனி சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட சென்றது தெரிய வந்தது.அவரிடம் இருந்து 50 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.