கோவில்பட்டி பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 19 மற்றும் 27 வது வார்டு பகுதி மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா கருணாநிதி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கான மனுக்கள் பெறப்பட்டது.