ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் தோல் மற்றும் ரசாயன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை பின்புறம் உள்ள குளம் தோல் மற்றும் ரசாயனக் கழிவுகளால் அதிக அளவில் மாசடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் குளத்தினை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவின் பேரில் குளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.