பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பாண்டக பாடியைச் சேர்ந்த கணவன் மற்றும் மகனை இழந்த ஏழைத்தாய் ராஜேஸ்வரு தனது வாழ்வாதாரத்திற்காக உதவி கேட்டு மனு கொடுத்த பத்தே நிமிடத்தில் நடமாடும் காய் கனி வண்டிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். ஆணையைப் பெற்ற அந்த ஏழை தாய் கண்ணீர் மல்க கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்