ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக வாலாஜாபேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறை இயக்குனர் வெங்கட்ராமன் வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜாவிடம் சிறந்த காவல் நிலையத்திற்கு விருதினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்