திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி வரை செல்லும் அரசு பேருந்து கிருஷ்ணகிரி கூட்டு சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது அருகே பைக்கில் வாலிபர் ஒருவர் கெத்தாக அமர்ந்து இருந்த பைக் மீது இடிப்பது போல வருகிறாய் என்று அரசு பேருந்து ஓட்டுனர் சிவக்குமாரை தாக்கியுள்ளார். தகவல் அறிந்த நகர காவல் நிலைய போலிசார் ஓட்டுநர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் மடவாளம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சசி மகன் வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.