பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவர் சிலை பின்புறமாக சுமார் 1.40 ஏக்கர் காலியிடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற வழக்கு காரணமாக பயன்பாடு இன்றி இருந்து வந்தது. தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் உரிமை கொண்டாடி வந்தனர். இந்த இடம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு தர்க்காராக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணைஆணையரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.