லிங்கன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் மற்றும் சென்னை சர்வதேச பாதுகாப்பு, அமைதி நிறுவனத்தின் அமைப்பின் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 37 ஆண்டு காலமாக சமூக சேவை செய்தமைக்கு பணியை பாராட்டும் விதமாக ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக அலுவலர் கணேசனுக்கு உலக அமைதிக்கான தூதர் விருது, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.