பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் துணை முதல்வர் சிவக்குமாரை கோயில் அதிகாரிகள் மலை கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர் மாலை நேரத்தில் நடைபெறக்கூடிய சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார். கோயில் அதிகாரிகள் துணை முதல்வர் சிவக்குமாருக்கு பிரசாதங்கள் வழங்கினர். தொடர்ந்து மலைக் கோயிலில் நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்