நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக - கேரளா மாநில எல்லை பகுதியான நாடுகாணி மற்றும் மேல் கூடலூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டு வருவதால் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்