தமிழகத்திற்கு தரவேண்டிய சமக்ரா சிக்சா' கல்வி நிதியான 2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க கோரி திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது கட்சி அலுவலகத்தில் காலை வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்,இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வரும் அவரிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தொலைபேசி மூலமாக பேசி ஆதரவு தெரிவித்துள்ளனர்