பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாரம்பரிய விதை திருவிழா நடந்தது. இந்த விதை திருவிழாவில் பாரம்பரியமிக்க நாட்டு காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் நெல் வகைகள், சிறு தானிய வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பாரம்பரியமிக்க நாட்டு விதைகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டன அதோட சிறுதானிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன இதில் ஆர்வமுடன் விவசாயிகள் கலந்து கொண்டு விதைகளை வாங்கி சென்றனர்.