தொண்டியில் செயல்பட்டு வரும் அரைஸ் என்ற தனியார் சிறு நிதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் ஐம்பதாயிரம் (₹50,000) கடனாகப் பெற்றிருந்தார். கடன் தொகைக்கான தவணைத் தொகையை இதுவரை சரியான முறையில், எந்தவித தாமதமும் இன்றி செலுத்தி வந்த நிலையில், நடப்பு மாதத் தவணைத் தொகையைச் செலுத்துவதில் சில நிதி நெருக்கடிகள் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிதி நிறுவனத்திலிருந்துஊழியர்கள், இரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டுகின்றனர்