காரைக்குடி அருகே பள்ளத்தூருக்கு வந்த பால் வேன் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர் ஆய்வில், 60 மூடைகளில் மூன்று டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டது மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் 35, மேல அனுப்பானடியை சேர்ந்த ஆனந்தகுமார் 24, மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த விஜய் 35 ஆகிய 3பேரை பள்ளத்தூர் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும் குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.