திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இன்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆண்டாள், முன்னாள் மாவட்ட செயலாளர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் சங்கரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.