தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீவி மார்க்கண்டேயன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.