கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே பழுதடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு வழங்கினார் இதை நம் பப்ளிக் ஆப் மூலம் செய்தியாக வெளியிட்ட நிலையில் மின்சார வாரிய ஊழியர்கள் பழுதடைந்த நிலையில் மிகவும் ஆபத்தாக இருந்த மின்கம்பத்தை மாற்றினர் இதனால் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்