திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் அவதிப்பட்டு வந்தனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி ஆணையரிடமும், கவுன்சிலரிடமும் மனு அளித்தும் செவி சாய்க்காதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென அலங்காயத்திலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் கட்டைகள் மற்றும் கற்களை போட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.