திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் அமரேஷ் பிரசாத் என்ற தொழிலாளி திங்கள் இரவு தவறி விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி சக தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வட மாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்,