திண்டுக்கல்லில் நெகிழி பைகளின் பயன்பாட்டை குறைக்கவும், மஞ்ச பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தவும் "நெகிழி சேகரிக்கும் இயக்கம்" உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலமாக மாநகராட்சிக்கு சொந்தமான நீர் நிலைகளுடன் கூடிய நடைபயிற்சி பூங்காக்கள் அமைந்துள்ள சிலுவத்தூர் குளம், கோபால சமுத்திர குளம் உட்பட 4 குளங்களில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தனர்.