பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து கூற மறுப்பு தெரிவித்ததுடன், இது குறித்து வழக்கறிஞர் பாலு தெரிவிப்பார் என்று கூறி விட்டுச் சென்றார். பாமக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 12.26க்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடலூர் கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்பட்டார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.