திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ரத்தப் பரிசோதனை புற்று நோய்க்கான ஆரம்ப கட்ட பரிசோதனை காசநோய் பரிசோதனை இசிஜி எக்கோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான ரத்த பரிசோதனைகளும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்த பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முகாம்களை பார்வையிட்டு சிகிச்சை பெற வந்தவர்களிடம் கூரைகளை கேட்டிருந்தார்.