கோணப்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். திருப்பத்தூர் அருகே ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பிரேம்குமார் என்னை காதலிக்க வேண்டும் எனவும் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமிக்கு தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரை பெயரில் போலீசார் பிரேம்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதி மரத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.