திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள மாணிக்க நகர் ரயில்வே சுரங்கப்பாதை முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் சுரங்க பாதையில் சுமார் இரண்டு அடி அளவு தண்ணீர் தேங்கியதால் ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து சென்றனர். மேலும் நடந்து செல்பவர்கள் தண்டவாளத்தை கடந்து சென்றனர். முழுமையாக தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்தனர்.