திருப்பத்தூர் நகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 15 விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று சக்தி நகர் பகுதியில் தாரை, தப்பட்டை, பம்பை, வாத்தியங்கள் முழங்க துவக்கியது. இந்த ஊர்வலம் வாணியம்பாடி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில் தெரு, கோட்டை சிவன் ஆலயம், நகை கடை பஜார், கிருஷ்ணகிரி ரோடு , ஹவுசிங் போர்டு வரை ஊர்வலம் நடைபெற்றது.