தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க கோரி எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த மூன்று நாட்களாக திருவள்ளூரில் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வந்திருந்தார், அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதால் மேலும் உடல் மோசம் அடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்