சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகேசர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்,பன்னீர்,சந்தனம், விபூதி,இளநீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதை தொடர்ந்து அன்னதான கூடத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னத்தில் லிங்கம் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 40,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவை அருந்தி சென்றனர்.